நீராட்டம்
(யசோதை பாவத்திலிருக்கும் பெரியாழ்வார்)
தன் மைந்தனை நீராட்ட அழைப்பதில் இத்தனை ஆனந்தம் உணர முடியுமா என்ன!
அவள் மட்டுமா ஆனந்தம் உணர்ந்தாள்...நாமும் அல்லவா அவன்பின் ஓடினோம்! வெண்ணெய் பூசி...புழுதியில் உழன்று...முடை நாற்றம் மணக்க...இந்த அழுக்கு கண்ணன் ஒன்பது நாட்களும் வளைய வந்து கொண்டிருந்தான்...ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு வரி அவன் மேன்மை உரைக்கிறாள்...ஒரு வரி அவன் செய்யும் சேட்டையில் சொக்கிப் போகிறாள்...நான்காவது வரி கொஞ்சி கெஞ்சி அழைக்கிறாள்...அடியேனும் ஆவலாய் காத்திருந்தேன்...இன்று இவன் கடாரம் நிறைந்த சுடு தண்ணீரில் நெல்லிக்கனி கலந்து நீராடி...சந்தனம் மஞ்சள் பூசி ...செங்கழுநீர் மாலை சூடி கமகமக்க வருவான்...
இப்படி அவனைஅநுபவிக்கக் காத்திருந்தால் எம்பிரான் என்னை ஏமாற்றி விட்டான் ஒன்பது கடந்து பத்தாம் பாட்டு வரும் நொடிப் பொழுதில் அனைத்தும் முடித்து விட்டு வந்து விட்டான்...பிறகு அழுக்கு கண்ணனை அநுபவித்தாயிற்று...
புழுதியளந்த பொன்மேனிஎம்பெருமாட்டிக்கு(யசோதை) மட்டுமல்ல அடியோன்களுக்கும் அது தான் பிடிக்கும்... சற்று நிற்க...இவன் சுற்றி சுற்றி வருகிறான் கண் பட்டு விடப்படப்போகிறது இந்த கரியமாலுக்கு... மையிட்டு வருகிறேன்...
அடுத்து பூச்சூட்டலில் அவன் என்ன செய்ய இருக்கிறான் என்று...ஆவலாக இருக்கிறது!
ரசித்து...புகழ்ந்து...பழித்து...கொஞ்சி...அவனை சேவித்த முழு நிறைவுடன்
காத்திருக்கிறேன் அடுத்த பாடத்திற்காக...
🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
அருமை !
ReplyDelete