திருமாலை பாகம்-4 (34-45)
தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமாலை பாகம் நாலோடு நிறைவு பெறுகிறது... திருமாலை...ஐ....ஐ....ஐ.....ம்ம்ம்ம்ம்.....இதயம் வலிக்கிறது...தொண்டரடிப்பொடியாழ்வார்... தன்னை தாழ்த்தி தாழ்த்தி... நம்மை நமக்கு உணர்த்துகிறார்...தான் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி அரங்கனை அழைக்கிறார்...அவர் செய்தது தவறென்றால்? நாம் செய்தது...செய்வது...சட்டென குப்பைத்தொட்டியில் நின்ற ஓர் உணர்வு...அடியேனுக்கு. அப்படியிருந்தது மட்டுமல்லாமல், அதுவே சரியென நினைத்தது! தவறுகள் அவ்வளவு இயல்பாகிப்போனது! தவறிலேயே ஊறித் திளைத்து...புரையோடி... கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இருப்பது புரிந்தது, ஆழ்வார் பாசுரங்களால்! நம்மை தூய்மைப்படுத்தி அரங்கனை பற்றும்படிவைக்க...அத்தனை அத்தனை தன்னை தாழ்த்தி கொள்கிறார்! மனம் தூய்மை பெறுமா... அரங்கன் திருவடி பற்றுவோமா... ஆனால் நாம் இருக்கும் நிலையை நன்றாக உணரலாம்! வாருங்கள்... ஆழ்வாரைப் பற்றுவோம்! அவர் நம்மை கரைத்தேற்றுவார் என்ற முழு நம்பிக்கையோடு! 34 ம் பாடல் இங்கு அங்கு என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத படி எங்கும் எதிலும் வீற்றிருக்கிறான் அரங்கன்... அவன் நம் உள்ளத்தின் உள்ளும் நிறைந்திருக்கிறான்...