மனப்பயணம்
(நம்மாழ்வார் எம்பெருமானைக் காணுமாறு மனம்உருகி அழைக்கிறார்)7-6
பத்மநாபா ஓ!
பத்மபாதா ஓ!
தாமரைக் கண்ணா ஓ!
தனியேன் தனிஆளா! ஓ!
ஆஹா...சொல் இனிமையா? பொருள் இனிமையா? இல்லை இந்த "ஓகாரத்தின்" ஒலி தான் இனிமையா ?தெரியவில்லை...
அதன்பிறகு அடியேன் அனைத்திலும் ஓ வை ஒட்டிப்பார்த்தேன்(பாத்திரம் ஓ! புத்தகம் ஒ! ) பொருந்தவில்லை... இனியவற்றுளெல்லாம் இனியவனுக்குத்தான் எதுவும் பொருந்தும் போலும்! இப்படி ரசித்தபடி இருக்க சந்தை அடுத்த பாடலுக்கு சென்று விட ஓடோடி வந்தேன் நினைவுகளில் இருந்து...வாய் தான் வந்ததே தவிர மனம் வரவில்லை... ஆழ்வாரின் அடுத்த இனிய சொல் வந்தால் தான் இது மறையும் போலும்...இதோ வந்து விட்டது...
"என் ஆர்உயிர் நீயானால்"
"என் பொல்லா கரு மாணிக்கமே"...சொக்கிப்போய்விட்டேன்...
எம்பிரான் உறுதியாக வரமாட்டான்...பிறகு...
வந்து விட்டால் இவ்வாறு எல்லாம் அழைப்பது நின்று விடுமே! அவன் எவ்வாறு ரசிப்பான்!
விடவில்லை ஆழ்வார்...நம்
அனைவரையும் மனப்பயணம் அழைத்துச்செல்கிறார்...
நொடிப்பொழுதில் பரமபதம் தரிசித்து... ஐம்புலன்கள்... நான் முகன்...ருத்ரன்...
இவற்றுள் இருக்கும் எம்பிரானை தரிசித்து ... இலங்கை சென்று இராணவனை வீழ்த்திய இராமனை தரிசித்து...பிறகு ஆயர்குலம் சென்று கம்ச வதம் செய்து...அழகு கண்ணனை சேவித்து.... மனப்பயணம் இனிதே முடிந்தது...
இன்னும் அடியேனுக்கு "ஓ"வின் ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
காத்திருக்கிறேன் அடுத்த பாடத்திற்காக....
அடியேன்
நீங்காத நிறைவுடன்
சியாமளா
🙏🙏🙏🙏🙏🙏
Great job!
ReplyDelete