பேரானந்தம்

நம்மாழ்வார் எம்பெருமானின் திருமேனி அழகை அனுபவிக்கிறார்

(கோப மிகுதி)7.7

உருகி அழைத்தும் எம்பிரான் வராத காரணத்தால் ஆழ்வார் மிகுந்த கோபத்தையும்...

வருத்தத்தையும்...அடைகிறார்.... அந்த கோபவெளிப்பாடாக இந்த பத்து பாடல்களும் அமைந்துள்ளன...இன்றுகோபத்திற்கு புதிய பார்வை கற்றுக் கொடுத்தார் ஆழ்வார்...

கோபமாக இருந்தால் இன்னும் இன்னும் அன்பு செலுத்த... இன்னும் இன்னும் அவன்பால் ஈடுபட... அவனையே நினைத்துருக....

அச்சோ...அச்சோ...

ஆழ்வாரே..கோபமாகவே இருங்கள்... அப்போதுதான் உங்கள் பார்வையில் எம்பிரானை பார்க்க பார்க்க....அவனில் ஈடுபட...பேரானந்தம் ஆக

இருக்கிறது...

ஆழ்வாரின் பார்வை இதோ



அவனுடைய இரு "திருக்கண்களும்" பேதைப்பெண்களின் ஆத்மாவை அருந்துகிறது...

அவனுடைய நீண்ட நெடிய "திருமூக்கு"... உயிருக்குள் சுடரொளியை ஏற்றுகிறது...

அச்சோ!

அடுத்து அவன் "திரு

அ தரம்"...

வாடாத கோவைப் பழம்...

அழகெல்லாம் திரண்டு...எத்திசை நோக்கினாலும்...பவளக்கொழுந்தாக காட்சிப்படுகிறதே... அடுத்து அவனின் "திருப்பு ருவம்"...

வளைந்த "கரும்பு வில்" !

மின்னலின் ஒளியாய் "திருப்பற்கள்"! 

 அவன் "திருகாதுகள்" குண்டலங்கள் தளிர்க்கும் தளிர்கள்!

எட்டாம் நாள் பிறைநிலவின் குளிர்ச்சி அவன் திரு "நெற்றி"!  திருத்து ழாய் மணக்கின்ற ...மிளிரக்கூடிய..இருள் போன்ற அவன் "திருக்குழல்"

இவ்வாறெல்லாம் அவன் திருவழகை சேவிக்கிறார் ஆழ்வார்.....

இப்போது சொல்லுங்கள் ஆழ்வார் கோபமாகத்தானே இருக்க வேண்டும்...

தேனுண்ட வண்டாய் ...

களிப்போடு காத்திருக்கிறேன்..

அடுத்த பாடத்திற்கு...

(40 வருடம் வீணாய்ப்போனது ஆழ்வார் பாசுரம் கேட்காமல்)

அடியேன்...

சியாமளா 


🙏🙏🙏🙏🙏🙏


Comments

Post a Comment

Popular posts from this blog

நீராட்டம்

எம்பெருமாட்டியின் கனா