பூச்சூட்டல்

(யசோதை பாவத்திலிருக்கும் பெரியாழ்வார் அந்த கரிய குழல் உடையவனை

 (எம்பிரானை) விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார்)

ஆஹா...இந்த பிரபந்தத்தில் வரும் பத்து பாடல்களில் ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விதமான பூவைச்சூட எம்பிரானை அழைப்பதாக அமைந்துள்ளது...

இப்பூக்களில் (படங்களை காணும் போது) சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் இறக்குமதியான பூக்கள் என்று நினைத்தது உண்டு !இத்தனை வருட காலம் அப்படித்தான் நினைத்தேன் இன்று வரை...

ஆனால் அது நம் தேசத்தின் பூக்கள்.... அதற்கு அழகழகான தீந்தமிழ் பெயர்கள்... (புன்னை,கருமுகை, செங்கழுநீர், குருக்கத்தி, இருவாட்சி செண்பகம்... அப்பப்பா! தேன் வந்து பாயுது காதினிலே)


இதோ ஆழ்வார் பாசுரத்தின்

சிறு குறு சுருக்கம்!

இந்த பத்து நாட்களும்...யசோதை தன் மைந்தனை பூச்சூட அழைக்கிறார்... ஒவ்வொரு பாடலிலும்...அவனை உவக்கிறாள்... நெகிழ்கிறாள்...வாஞ்சை

யாகச் சாடுகிறாள்...பூச்சூட அழைக்கிறார்...

அவள் உவந்து அழைத்த வரிகள்..."அருமருந்தாவது 

அறியாய்"(சம்சாரிகளின் பாவத்தைப்போக்கும் அருமருந்து நீ)

"கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்"

"முகிற்கன்று போலே"(மேகம் ஒரு குழந்தையை ஈன்றால் 

எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம் கண்ணன்)

கேட்கும் போதே அவன் கரிய சிறிய உருவம் வந்து நம்மை ஆட்கொள்கிறது!

"தேனில் இனிய பிரானே"

(குணத்தில் தேனை விட தித்திப்பவனாம்) இவ்வாறு நெகிழ்ந்து அழைக்கிறாள்..

மற்றவையனைத்தம் அவன் 

வீரத்தையும்...அவன் சேஸ்டிதங்களையும் உரைக்கின்றன...இன்னும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் எழுதலாம் இந்த ஒரு பிரபந்நத்தை வைத்தே... அவ்வளவு உள்ளடக்கம்....

மற்றும் ஒரு அறிய தகவல் தெளிந்த நீரில் மட்டும் தான் பூக்குமாம் "செங்கழுநீர் பூ"

இறுதியில் அவன் வந்தானா? பூச்சூடினானா? தெரியவில்லை... ஆனால் பாசுரம் படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் அந்த கரிய சுழல் குழல் மேனியனுக்கு... விதவிதமான பூக்கள் சூட்டி மகிழ்ந்ததென்னவோ நிச்சயம்!

ஒவ்வொரு பெற்றோரும் யசோதை பாவத்தில் குழந்தைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆணை இருந்தால் நன்றாக இருக்கும்...இவன்... இந்த கரியகுழலளவன்... வந்து வந்து போகிறான்...

எப்போதும் போல் இப்போதும் இதயம் கனக்கிறது...

ஆனந்தத்தால்!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா