பொங்கும் பரிவு

 (சென்னியோங்கு பெரியாழ்வார் திருமொழி 5.4)

"பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் 

பட்டர் பிரான் பெற்றார் 

பெரியாழ்வார் என்னும் பெயர்"



யாருக்கேனும் இவ்வுலகின் மீது...உங்கள் மீது...சுற்றத்தின் மீது ஆற்றாமை வருகிறதென்றால் 

பெரியாழ்வார் பாசுரம் படியுங்கள்... அனைத்தும் நொடிப்பொழுதில் மாறிவிடும்... நாம் இருந்த இடத்தில் தான் இருப்போம்... நம்மைச்சுற்றி எதுவும் மாறியிருக்காது... ஆனால் நாம் மாறியிருப்போம்...நம் மனம் மாறி இருக்கும்...நம்மை தாயுள்ளத்திற்கு மாற்றியிருக்கும் அவரின் பரிவு... அடியேன் மிகை கூற வில்லை...பரி

வென்றால் பரிவு... அப்படியொரு பரிவு...

பேரிடராக தோன்றியது அனைத்தும் தூசகத்தோன்றும்...

பேரின்பம் எனத் தோன்றியதனைத்தும்

அவ்வளவு இன்பமாக இருக்காது...

மனம் இலகுவாக இருக்கும்... காற்றில் பறப்பதைப்போல...

கண்கள் அசும்பாயிருக்கும்...

(கண்கள் நீர் கொட்டி கொட்டி சேறாதல்)

"ஆனந்த அழுகை" இந்த அழுகையில் துளிகூட வருத்தம்...வேதனை இருக்காது...அத்தனையும் ஆனந்தம்...மகிழ்வு...

நிறைவு... இல்லை இல்லை அதை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை...

உணர்ந்தால் மட்டுமே தெரியும்...அதன் சுகம்!

ஒவ்வொரு பாசுரத்திலும் அடுத்த வரி தெரியாமல் கண்கள் நிறைந்து விடும்! 

பத்து பாட்டிலும் ஒவ்வொன்றும் அப்படியே! 

இதோ பாட்டின் சின்னஞ்சிறு குறிப்பு

அவன்(எம்பிரான்) குற்றம் குறை பார்ப்பதில்லை..யார் வேண்டுமானாலும் அவன் முன் நிற்கலாம்..(சதிரா)என்னை...என் உடமையை உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டேன்...இனி என்ன எனக்கு கவலை இருப்பதாய் நீ கவலை உருகிறாய்?என்னுடைய பிறவிக்கடல் நான் கடப்பதற்கு ஏதுவாய் வற்றி விட்டது ...என் பாவங்கள் அனைத்தும் கொளுந்து விட்டு எரிகின்றது! எனக்கு அறிவு கொடுத்து அது என்னை மூழ்கும் அளவு பெருக்கெடுத்து ஓடுகிறது!

நான் செய்த பாவமனைத்தும்

உன்னைப்பற்றிய 

பின் ...புதர் தேடி ஓடி ஒழிந்து கொண்டது!

கடல் கடைந்து அமுதம்

கலசத்தில் நிறைப்பது

போல்...நான் உடல் உருகி உன்னை சேவித்து ..உன்னை என்னுள்நிறைத்துக்

கொண்டேன்! இனி எனக்கு மட்டுமல்ல...என்னைச் சேர்ந்தவர்க்கும் எத்தீங்கும் நேராது!

இப்படியே அவர் பாடப்பாட நமக்கு மாற்றம் நிகழ்ந்து விடும்...அவன் கொடுத்தது அனைத்திற்கும் நன்றி கூற துவங்கி விடுவோம் !நம்மை அறியாமலேயே!

பின் என்ன ! மனதில் நன்றி உணர்வு வந்தால் அனைத்தின் மீதும்... குறிப்பாக எம்பிரான் மீதும் பரிவு ஏற்பட்டு விடுகிறது!

இருந்த இடத்திலேயே இருந்து... ஆழ்வார் பார்வை வழியாக நாம் பார்வை உணர்ந்தால்.....சொல்வதற்கு வார்த்தை அகப்படவில்லை...அப்படி ஒரு பெருமகிழ்ச்சி 

😢😢😢

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Post a Comment

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா