திருஎழுகூற்றிருக்கை

 (திருமங்கை ஆழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் (சாரங்கபாணி)பெருமாளிடத் தில் சரணாகதி செய்கிறார்)

எதைச் சொல்வது ... எதை விடுவது... அவ்வளவு உள்ளடக்கம்....

இப்பிரபந்தம் ஒரே ஒரு பாசுரத்தை மட்டுமே கொண்டு உள்ளது... ஆனால் ஆயிரம் ஆயிரம் உள்ளீடுகள் கொண்டிருக்கிறது...

அப்பப்பா... சற்று பொருங்கள்! மூச்சு 

விட்டு க்கொள்கிறேன்... அவ்வளவையும் சொல்லாவிட்டாலும் சிறிதேனும் சொல்ல ஆசுவாசம் தேவைப்படுகிறது...

இப்பிரபந்தம் "சித்திரக் கவி" வடிவில்ஆனது.."தேர்" அல்லது "ரதம்" வடிவத்தைப் சித்தரிக்கிறது...

தமிழ்க் கவியிலேயே சித்திரம் வரைய முடியுமா...

ஆயிரமாயிரம் சொற்களஞ்சியம் தமிழுக்கு உண்டு என்று அரிதியிட்டு கூறுகிறது ஆழ்வார் பாசுரம்...

இதில் ஒன்று என்றசொல்  14 முறையும்...

இரண்டு என்ற சொல் 13 முறையும்...

மூன்று என்ற சொல் 11 முறையும் ... நான்கு என்ற சொல் 9 முறையும்... ஐந்து என்ற சொல் 7 முறையும்...ஆறு என்ற சொல் 5 முறையும்...ஏழு என்ற சொல் 2 முறையும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது... இந்த எண்களுக்கு எண்கள் பொருள் மட்டும் இல்லாமல் பல்வேறு பொருள்படும்படி அமைந்திருக்கிறது...


                 121

               12321

             1234321

           123454321

        12345654321

      1234567654321

      1234567654321


இவ்வாறு எண்கள் தோன்றும் படியாக அமைகிறது...

எண் ஒன்று க்கு ஒன்று என்ற பொருள் மட்டும் இல்லாமல் "ஒன்றிய"(பொருந்திய) என்ற பொருளும்படும்படியாக

சில இடங்களில் அமைகிறது...

இரண்டு என்ற சொல்லுக்கு 

இரண்டு என்ற பொருள் மட்டும் இல்லாமல் "பெரிய" 

"ஆழமான"என்ற பொருளிலும் வருகிறது...

ஆறு என்ற சொல்லுக்கு எண் அல்லாமல் ஆறு என்ற நீர் நிலை வரும் படியாகவும் அமைகிறது...

எண் வரிசையிலேயே பயணித்து... இராமவதாரம்...திரு

விக்கிரம அவதாரம்...

கஜேந்திர மோட்சம்...

சேவித்து...

கர்ம யோகம்...பக்தி யோகம்... பற்றி அறிந்து...

ஆறு வகை சமயங்கள்...இருவகை பிறப்பறிந்து.. மூன்று விதமான 🔥 தீ... நான்கு விதமான வேதங்கள்....

ஐந்து வகையான வேள்வி....ஆறு வகை யாகம்....

ஐம்புலன்கள் அகத்தினில் அடக்கி...முக்குணத்தில் இரண்டினை அகற்றி... மீதமிருக்கும் ஒரு குணத்தில் (சத்வம்) ஒன்ற வேண்டி...

ஏழு உலகங்கள்... அறுசுவை... அவற்றின் பயன்கள்...ஐம்படை...

ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் நான்கு தோள்கள்... மூன்று விதமான வண்ணங்கள் கொண்ட கடல் வண்ணனை....அவனின் இரண்டு திருவடிகளை...

இவை யனைத்தையும் மனத்தில் எப்போதும் இறுத்த வேண்டி...

திருமடந்தை...மண்

மடந்தை... நப்பின்னை...தாயாரை கண்டு கண்கள் குளிர்ந்து...

இவ்வாறாக தேரின் படிநிலைகள் நிறை பெறுகிறது...

ஆஹா... இப்போதுதான் 

தேரின் மேலுள்ள... செல்வ வளம் மிகுந்த திருக்குடந்தை

"சாரங்கபாணி "யை கண் குளிர சேவித்து... அவனிடம் 

சரணாகதி அடைந்து பரம பதம் வேண்டுகிறார் ஆழ்வார்....

அப்பா...இதயம் எனும் கூடையில் ஆழ்வாரின் பாசுரப் பூக்கள் நிறைந்து விட்டது....மனம் முழுக்க மணந்து கொண்டிருக்கிறது....

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் 


🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Post a Comment

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா