அமலன் ஆதி பிரான்

திருப்பாண் ஆழ்வார் அரங்கனின் முன் நிற்க...



அரங்கனைக் கண்டதும் அவனிடமிருந்து... அருள் வெள்ளம் பாய்ந்து வர...அந்த வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லாமல் இருக்க அருகில் இருக்கும் திருமணத்தூணை இறுக பற்றிக்கொள்கிறார்...

இப்போது அனைவரும் மனதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்... ஆழ்வாரின் பக்தி வெள்ளம் வரப்போகிறது...

அந்த அரங்கன் அருளால் ஆழ்வார் பாடுகிறார்...மெய் சிலிர்க்கிறார்... வார்த்தையில் வடிக்கிறார் இவ்வாறாக...

"திருப்பாதத்திலிருந்து"

"திருக்கண்கள்" வரை 

ஒவ்வொரு அவயமாக 

சேவிக்கிறார் ஆழ்வார்...

அழகு அழகான நாமங்களைச் சொல்லி அழைக்கிறார்... அமலன்...விமலன்..

நிமலன்...நின்மலன்...நீதிவானவன்...நீண்டமதில்களையுடைய இந்த அரங்கனின் "திருப்பாதம்" என் மனத்துள் புகுந்து கண்களை நிறைத்துக்கொண்டது.

வாமனனாய் வந்து இவ்வுலகைக்காத்தவன்...

காகுத்தனாய்(இராமனாய்) வந்து அரக்கர்களை அழித்தவன் இன்று அந்த அழுப்பு தீர திருவரங்கத்தில் படுத்திரிக்கிறான்...அவன்

"பீதாம்பரத்தின்" (சிவந்த ஆடை) மேல் என் சிந்தனை 

எல்லாம் செல்கின்றது...அந்த மாலை நேரத்து நிறத்தையுடைய ஆடை அணிந்த இடையிலேயே கண்கள் பதிந்து விட்டவராய்... மெதுவாக மேல் நோக்கி...

பிரம்மனை ஈன்ற "திருவுந்தி" யைப் சேவிக்கிறார்...

ஆஹா! அடுத்து ஓர் அழகிய திருநாமம் "ஓதவண்ணன்" என்று இராமனைச்சொல்லி...

அவனும் அரங்கனே என்கிறார்...உந்திக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாய் இருக்கும் "உதரபந்தம்"(மேகலை: ஒட்டியாணம்) என் கண்களிலேயே உலாவிக்கொண்டு இருக்கிகிறது...

காலம் காலமாக வினைகளை செய்து வந்த என்னை நொடிப்பொழுதில் அனைத்தும் அகற்றி தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்... இதற்கெல்லாம் எந்த கொடிய பெரிய தவம் எதுவும் செய்யவில்லையே....

அந்த பெரிய பிராட்டி வசிக்கும் "திருமார்பு" அடியேனை ஆட்கொண்டு விட்டது!

அந்த சிவனின் துயர் தீர்த்த வரும் அரங்கனே ...அனைத்து உலகையும் உண்ட "கண்டம்"(தொண்டை)அதைக் கண்டதுமே எனக்கு பரமபதம் கிடைத்ததாக உணர்கிறேன்...

அச்சோ....

அடுத்து அடுத்து இனிய பெயர்கள் 

ஐயனார்..

அணியரங்கனார்....

அரவின் அணைமிசை

மேயனார்...அவன்

"திருவதரம்" அடியேனை மயக்கி விட்டது!


பெரிய உருவத்தை உடையவனான இரணியனை அழித்தவனும் அரங்கனே...

அவனின் பெரிய நெடிய அகலமான சிவந்தகண்கள் (கருணையால் சிவந்த)

என்னை பேதமை செய்து விட்டது!

இரேழு உலகை உண்ட அந்த நாராயணனும் அரங்கனே...அவன் முடிவில்லாத "எழில்மேனி'' என் நெஞ்சத்தைப் பறித்துக் கொண்டது!

கொண்டல்(மேகம்) வண்ணன் ...கோவலன்...வெண்ணெய் உண்டவாயனை...என் உள்ளம் கவர்ந்தவனை... இன்று நான் கண்டு விட்டேன்!

இனி வேறு எவற்றையும் என் கண்கள் காணாது!

அப்பப்பா!

அடியேனின் இதயம் நழுவி ஆழ்வாரின் பாசுரத்தோடே சென்று விட்டது! எத்தனை தடுத்தும் இயலவில்லை...

திருப்பாண் ஆழ்வார் திருவடிகளை சரணம் 


🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா