குணக்கடல்
திருவாய்மொழி 7.5
ஆழ்வார்கள் பாசுரங்களில் மட்டுமே எம்பெருமானின் எந்த அவதாரம் எப்போது வரும் என்று கூற முடியாது தயாராக மனதை வைத்தால் மட்டும் போதும்.எம்பிரானை ஆழ்வார் பயணிக்கும் அத்தனை அவதாரிங்களிலும் மனம் குளிர சேவிக்கலாம்.
இந்தப்பதிகம் வெகு சிறப்பு வாய்ந்தது ஏனெனில் இதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு அவதாரத்தையும் அந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த குணங்களையும் எடுத்துரைக்கிறார். கற்பது என்றாலே அது எம்பெருமானைக் கற்பது மட்டுமே.வேறு எதுவும் கற்பதில் சேர்வதில்லை.
அதிலும் "இராமபிரான் "குணங்களையே முதலில் கற்க வேண்டும் (கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ) ஏன் இராமனை முதலில் வைக்கிறார்! காரணம் இருக்கிறது இராமனின் குணம் அப்படி!
கடிந்து பேசாதவன்! சத்ய வழியில் நடப்பவன்!சுலபன்! அடியார்க்கு இரங்குபவன்! அயோத்தியின் அத்தனையையும்(அசையும் அசையா பொருட்கள்)உய்வித்தவர்!கற்றால் இராமபிரானைக்கற்க வேண்டும் அப்படியானால் கேட்டால்? ....."கேசவன் கீர்த்தியைக்" கேட்க வேண்டும் செவி தாங்காத படி வசவுகளால் பழித்த அந்த சிசுபாலனைகொன்று தன் திருவடி சேர்த்தவன்.. அவன் ! நாம் உய்வதற்கு அடுத்த வழி அவன் கீர்த்தியைக் கேட்பது!
நீரீல் மூழ்கிய இப்பிரபஞ்சத்தை "வராக ரூபமெடுத்து" தனது கொம்பினால் காத்த அந்த இறக்கத்தை நாம் உணர்ந்தோமேயானால்...அவன் திருவடி பற்றுவதைத்தவிர வேறு எதுவும் வழி தோன்றாது!
(பற்றுவதானால் அவன் திருவடி பற்ற வேண்டும்)
அந்த திருமகளேயே திருமார்பில் கொண்டவன்அடியவர்களுக்காக மாவலியிடம் "வாமனனாய்" பிச்சை கேட்டு ...நம்மை காக்கிறார்!இதை அறிந்த பிறகு அவனுக்கு அடிமை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றாது!
இவ்வாறாக விரிகிறது பதிகம்! கண்கள் நீர் கொட்டுகிறது!அடங்க மாட்டாமல்!
நீரைத் துடைக்க விருப்பமில்லை...சுகமாத்தானே இருக்கிறது!
கொட்டிவிட்டு போகிறது!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Comments
Post a Comment