தேவுமற்றுமறியேன்(கண்ணி நுண் சிறு தாம்பு)
கண்ணி நுண் சிறு தாம்பு
(மதுரகவி யாழ்வார் நம்மாழ்வார் மீது கொண்ட தீராத ஆச்சார்ய பக்தியைக் கூறுகிறது இப்பிரபந்தம்)
எதில் துவங்குவது... எதில் தொடர்வது...எழுதத் துவங்கியதும் இப்பிரபந்த கருத்துகள் அனைத்தும் மழைபோல் கொட்டுகின்றன!
மதுரகவியாழ்வார் ... அவரின் ஆச்சார்ய பக்தி...மெய் சிலிர்க்கிறது...
கரடுமுரடான சிறு கயிற்றினால் தன்னை கட்டும் படியாக செய்தவன் யார் தெரியுமா... இவ்வுலகை யெல்லாம் ஆள்பவன்... இவ்வாறெல்லாம் கூறும்போது ஆழ்வார் பெருமாளைப் புகழ்வது போல் தானே தோன்றுகிறது...அது தான் இல்லை.. அப்படி எளிமை பொருந்திய பெருமாளைவிடவும் தனது ஆச்சார்யர் நம்மாழ்வார்(திருக்குரு கூர் நம்பி) என்றதுமே நாவு தேனை விடவும் இனிக்கிறதாம்...(நம்பி-குணப்பூர்த்தியுடையவன் ...இந்த சொல் பிரயோகத்தை பெருமாளைத் தவிர முதன் முறையாக தனது ஆச்சார்யருக்கு பயன்படுத்துகிறார் ஆழ்வார்)
அடுத்து நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரின் மேன்மை...தங்கத்தால் இழைத்த மாடங்கள்... குயில்கள் நின்று ஆரவாரிக்கும் ஊர்...இவ்வாறெல்லாம் சொல்ல சொல்ல திருக்குருகூர் நம் முன் விரிகிறது...
நம்மாழ்வார் என்ற பெயரை சொல்லிச் சொல்லி அடியேன் இன்பத்தை அடைந்தேன்! அந்த திருக்குருகூராரின் பாடலை ஊரெல்லாம் பாடித்திரிகிறேன்! நம்மாழ்வாரைத்தவிர வேறு தெய்வமும் எனக்கில்லை ("தேவுமற்றுமறியேன்") என்கிறார்...மெய் சிலிர்க்கிறது...
மற்றுமோர் தீந்தமிழ் சொல் "திரிதந்தாகிலும்"(வழி தவறி)
அடியேன் வழி தவறிப் போனாலும் நல்வழிப்படுத்தும் அந்த "கரிய கோல திருவுரு"வை(பெருமாள்) எண்ணி உவக்கும் ஆற்றல் அடியேனுக்கு
எப்படி க்கிடைத்தது தெரியுமா? அந்த வண்குருகூர் நம்பிக்கு (நம்மாழ்வார்)ஆள் உரியன் (அடியேன்) ஆன பிறகே.... அன்னையாய்...அப்பனாய்.. எனை ஆட்கொள்பவனாய்
இருப்பவன் அந்த சடகோபன் மட்டுமே!
அடுத்து "ஆச்சார்ய லட்சணத்தை" எடுத்துரைக்கிறார் ஆழ்வார்
பெருமாள் கூட ஞானமுடையவரைமட்டுமே திருத்திக் பணிகொள்வார்...நம்மைத்திருத்துவதால் தமக்கு ஒரு பயனில்லாத போதிலும்...திருத்துவதற்கு நமக்கு எத்தகுதியும் இல்லாத போதிலும் அவர் நம்மை திருத்தி பணிகொள்கிறார்..
அதற்கு கைமாறாக அடியேனிடம் என்ன இருக்கிறது அன்பைத் தவிர....
என்று மதுரகவியாழ்வார் கூறி முடிக்க "சிஷ்ய லட்சணம்" புரிந்தது...கைங்கர்யங்களை எவ்வளவு காதலோடு செய்ய வேண்டும் என்று உணர முடிகிறது...ஆச்சாரியான் மேல் எவ்வளவு பக்தி வேண்டும் என்று இந்த சிறியேனால் உணர முடிந்தது....
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்
🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Comments
Post a Comment