கண் கோடி வேண்டும்

 திருவாய்மொழி 7.4

(ஒவ்வொரு அவதாரத்திலும் பெற்ற வெற்றிகளை ஆழ்வாருக்கு

சேவை சாதிக்கிறார் எம்பெருமான்) அவன்(எம்பெருமான்) எடுத்த அவதாரம் அனைத்திலும் நம்மாழ்வார்  உடன் இருப்பதாக...(ஒன்றி நின்ற சடகோபன்)உடன் பயணிப்பதாக... ஆழ்வார் உணர்கிறார்!

ஆழ்வார் அந்த "பேரானந்தத்தை"நமக்கு பாசுரம் வழியாக கடத்துகிறார்...அது இன்னும் இன்னும் ஆனந்தமாக இருக்கிறது!

இந்த பதிகமனைத்தும் செவிக்குசுவை மிகுந்து இருக்கிறது! அத்தனையும் சந்த நயத்துடன்...ஒருவித சங்கீதத்துடன்... கேட்க கேட்க இனிமை! இனிமை மட்டுமா இதோ ஆழ்வார் ஒவ்வொரு அவதாரத்தையும் இப்போது... இங்கே...இச்சனம்...நடந்தது போல ... பாடியிருக்கிறார்...கண்களை மூடிக் கொள்ளுங்கள்! ரசிக்கத் தயாராகுங்கள்!

முதல் பாட்டிலேயே "திரு விக்கிரமன்" வரப்போகிறான்! என்ன இருகரம் கூபீபிவிட்டீர்களா! 

"வாமன மூர்த்தியிலிருந்து"

"திருவிக்கிரமனாக" மாறுகிறார் அற்புத காட்சி 

இதோ சக்கரத்தாழ்வான்...

சங்கம்...கோதண்டம்(வில்)..கதை...வாள்... இவையனைத்தும் புடைசூழ அனைத்து திசைகளில் இருந்தும் "வாழ்த்தொலி" முழங்க... இவ்வுலகின் நீர்க்குமிழியை உடைத்து எழுகிறான்... "திருவிக்கிரமன்"....



கூப்பிய கையும்..பிளந்த வாயோடும்...அகம் நிறைந்த அவனோடும்... அப்படியே இருங்கள்... அடுத்து வர இருப்பது

"கூர்ம அவதாரம் " காதுகளை தீட்டி வைத்துக் கொள்ளுங்கள்! இப்போது பலவிதமான ஒலிகள் எழப்போகிறது. மந்திர பர்வத மலையை திருப்பாற்கடலில் ஊன்றி வாசுகி அரவத்தால் கடையும் பொழுது மலையில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சிகள் மேல்நோக்கி(எதிர் திசை) நோக்கி பயணிக்கிறது... அதிலிருந்து பெருத்த ஓசை ஏற்படுகிறது! வாசுகி இங்கும் அங்கும் சுழலப் படுவதாலும் ஓசை ஏற்படுகிறது! 



இதோ அமுது கிடைத்து விட்டது! ம்ம்ம்... அப்படியே நின்றால் எப்படி அடுத்து அடுத்து ஆழ்வார் செல்ல இருக்கிறார் தாயாராகுங்கள்! இதோ "வாரகமூர்த்தி"(பூவராகன்) வராக ரூபமெடுத்து கொம்பினால் குத்தி பூமியை காக்கிறார்! இது என்ன விந்தை...பூமி தூக்கப்படும்போது ஏழு நிலங்களும்...ஏழு மலைகளும்...ஏழு கடல்களும்...எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அதனதன் இடத்திலேயே இருக்கின்றன! இது விந்தையிலும் விந்தை!

"ஆழிலைக்கண்ணன்" பிரலயகாலம் வந்தது..நிலம்..நீர்...காற்று..தீ... அனைத்தையும் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றினான்...

யாருக்கும்... எத்தீங்கும் நேரவில்லை...என்னே அவன் வெற்றிச்செயல்!

அடுத்து பாரதப்போரை...கண் முன் நிறுத்துகிறார்...இதிலும் விதவிதமான ஒலிகள் செவிமடுக்கச் செய்கிறார்..

 ஆஹா! அடுத்து "நரசிம்ம அவதாரம்" மலையை (இரணியவதம்)இரு பிளவாகப் பிளந்ததை அருகிருந்து காண்பதை போல காண முடிந்தது.

அவதாரம் என்றால் "இராமன்" இல்லாமலா?

இதோ வந்து விட்டான்...இவன் எய்த அம்புக்கனையால்...பிணக்குவியலாய் அரக்கர்கள்...

அடுத்து"ஆநிரை காத்த கண்ணன்" குன்றம் எடுத்த பிரான் இதையுமே கண் முன்...காட்டுகிறார்... இவ்வாறாக...



கொடிய விலங்குகள் மலையில் இருந்து புரண்டு விழுங்கின்றன...நீரனைத்தும் சுனையில் இருந்து வேறு வழியாகப் பாய்கிறது...

ஆழ்வார் மட்டுமா அவன் அத்தனை அவதாரத்திலும் உடன் இருந்ததாக உணர்ந்தார்...நம்மை...நம் பின் வரும் அத்தனை சந்ததியினரையும் அல்லவா உணரும் படியாக உரைத்து விட்டு  சென்றார்....

இப்போது எதுவும் நல்லன செய்ததாய் நினைவில் இல்லை...ஆனால் எப்போதோ கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்...அதனால்தானே

ஆழ்வார் பாசுரம் கற்கும் பேறு பெற்றேன்!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா