பாரங்குச நாயகி படும்பாடு- தாயாரின் முறையீடு.கங்குலும் பகலும்

திருவாய்மொழி 7.2

இப்பதிகம் அரங்கனைப் பற்றியது.அரங்கனைப்

புகழும் பாசுரமல்ல; அவனிடம் அவனைப்பற்றியே முறையிடும் பாசுரம்...ஒருவரிடம் பன்முகத்தன்மை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட) கொண்ட வேறுபட்ட குணங்கள் உண்டு என்று சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதைப்பற்றி பதிவு செய்திருக்கிறார் நம் ஆழ்வார்...ஆம்! நம்மாழ்வார்!

நம்மாழ்வார் எம்பெருமானின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக நாயகி(பராங்குச நாயகி)பாவம் கொள்கிறார்... அவனை விட்டு பிரிந்து அவள் படும் பாடு தாங்காமல் பராங்குச நாயகியின் தாயாராக பாவம் கொண்டு...அவள் படும் வேதனைக்கு வழி சொல்லுமாறு முறையிடுகிறாள்... இவ்வாறாக...

உன்னை நினைத்து உருகி (அரங்கன்) இரவும் பகலும் தூக்கம் என்பதே அவள்(பாரங்குச நாயகி)கண்களுக்கு தெரியாமல் போனது...கண்களில் கண்ணீர் கொட்டுகிறது...துடைக்கும் படியாக அல்ல...இறைக்கும் படியாக...(அப்படியானால் நாமே முடிவுக்கு வந்து விடலாம் அவள் கண்களில் எவ்வளவு நீர் கொட்டி யிருக்கும் என்று)அழுவதை விட்டு விட்டு திடீரென கைகூப்புகிறாள்...கேட்டால் அங்கே சங்கு சக்கரங்கள் தெரிகிறது என்கிறாள்... உன்னை விட்டு உயிர் வாழ்வது கடினம் என்கிறாள்... இரு கைகளையும் மண்ணில் விட்டு துழாவிக் கொண்டிருக்கிறாள்...



உன்னை நினைத்து நினைத்து அவள் உயிர் உருகிக் கொண்டிருக்கிறது...

சிறிதும் வெட்கப்படாமல் மணாளனின் பெயரை

வாய் விட்டு உரைக்கிறாள்... மணிவண்ணா! கட்கிலீ!(கண்ணுக்கு புலப்படாத வன்)காகுத்தா! கண்ணனே!

இன்னும் ஒருபடி மேல் போய் கைகளையும் கால்களையும்  அப்படியே அகட்டாமல் கிடத்திய இடத்தில் அப்படியே கிடக்கிறாள்... மூர்ச்சையாகிறாள்... தீடிரென எழுந்து வானத்தை நோக்குகிறாள்...கஜேந்திர ஆழ்வாரை காப்பாற்ற வானிலிருந்து கருட வாகனத்தில் வந்தது போல் தன்னைக் காக்க வருவதாய் எண்ணிக் கொள்கிறாள்!

முறையிடுவதாக நினைத்து தாயார் அவன் மேன்மைகளையே உரைக்கிறார்..உலக முண்டு

உமிழ்ந்தாய்...(ஆழிலைக் கண்ணன்) அந்திப்பொழுதில் இரணியனை அழித்தவன்(நரசிம்ம அவதாரம்) அலைகடல் கடைந்த ஆராமுதன்...

பற்றிலார் பற்ற நின்றானே!(உன்மேல் பற்று இல்லாதவர்களும் அவர்களைக் காக்க உன்னை பற்றும்படி செய்தாய்...இவ்வுலக வாழ்வில் பற்றிலாத ஞாநிகளும் உன்னை பற்றும் படி செய்தாய்!)

மூவுலகை ஆள்பவனே! பிரம்மன் சிவன் இந்திரன் இவர்களுக்கு உள்ளிருந்து இவர்களை ஆள்பவனே!அடுத்து ஆழ்வார் பிரயோகிக்கும் வாக்கியம்

மனதை குளிர்விக்கிறது!(இப்போது ஆழ்வார்... ஆழ்வார் பாவத்திலேயே இருக்கிறார்)

"என் திருமகள்சேர் மார்வனேயென்னு என்னுடையாவியே! என்னும்" இதில் "என் திருமகள்" என்று சொல்வதிலிருந்து பெரிய பிராட்டியிடம் ஆழ்வார் கொண்ட பெருமிதம்...

நாங்கள் அனைவரும் அவளைச் சேர்ந்தவர்கள்...

அவளைச் சேர்ந்தவர்கள்  என்பதன் பொருட்டு எங்களை உன்னுடன் வைத்துக்கொள் .... என்ற ஒரு பொருளும்...ஒருமுறை பட்டரும் அவர் சிஷ்யரான நஞ்ஜுயரும் இவ்வாக்கியத்தை உணரும் போது ஏற்பட்ட அருமையான நிகழ்வும் கிடைக்கப்பெறுகிறது...

நஞ்ஜீயர் இவ்வரியை இடைவிடாது சேர்ந்து வாசிக்க...

என்னுடைய ஆவி என்ன என்று தெரியுமா? இருவருமாக (லட்சுமி நாராயணன்) சேர்ந்து இருக்கும் சேர்த்தி என்று பொருள் பட...

 பட்டருக்கு சேர்த்தி சேவை உடனடியாக கண்முன் 

கிட்ட... "ரங்கா" என்று கூறியவாறே மயக்கமடைகிறார்...

அச்சோ! அச்சோ!  (ஆஹா! எப்படிப்பட்ட பக்தி) இப்படி மறு பொருளும் கிடைக்கப்பெறுகிறது!🥲🥲🥲

(இப்போது பாரங்குச நாயகியின் தாயார் பாவம்) இப்படியெல்லாம் நீயிருக்க என் மகளை மட்டும் ஏன் அழுது புலம்ப விட்டாய்?

அவளைக் காக்க நீ எடுத்திருக்கும் முயற்சி தான் என்ன? என்று திருத்தாயார் முறையிட்டு முடிக்க ... பின்னர் மெதுவாக பாரங்குச நாயகியை தன் திருவடி அணுகச்செய்கிறான் அந்த மா மாயன்!

இப்பதிகம் அனைத்தும் பாரங்குச நாயகி படும் பாடு நினைவில் நிற்பது போல்...திருவரங்கத்தின் வளமிக்க நீர் நிலைகளையும் கண் முன் நிறுத்துகிறார் ஆழ்வார் (செங்கயல் பாய் திருவரங்கத்தாய்...செழுநீர் திருவரங்கத்தாய்..தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்...)

எப்போதும் போல் இதயம் நிரம்பி விட்டது...ஆழ்வாரின்

பக்தியால்...அரங்கனை இப்படியும் பார்க்கும் கண்ணோட்டத்தினால்...

உருகி மயங்கும் காதலினால்!

 நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா