எங்கும் எதிலும் அவனே(எம்பிரானே)
திருவாய்மொழி 7-8
போன பதிகத்தில் ஆழ்வாரை வருந்த வைத்த எம்பிரான் இந்த பதிகத்தில்
அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
இந்த பதிகத்தில் வரும் பத்து பாடல்களை அனுபவித்த பின் திரும்பிய இடமெல்லாம் எம்பிரானே இருப்பதாக ஓர் உணர்வு (சன்னல்,பேனா,புத்தகம்
இப்படி)பாசுரத்தின் தன்மை அப்படி ! அனைத்தும் அவனே என்பதற்கு
அழகு அழகாக ஆழ்வார் உணர்ந்து
விவரித்து கூறும் போது...
அனைத்தும் நம் கண் முன்னே விரிகிறது!
வெகு நாட்களாக இந்த வரிகள் எங்கு வரும் எனக்காத்திருந்தேன் அடியேன். இதோ வந்து விட்டது! நினைத்து நினைத்து ஆறுதல் பட்ட வரிகள்!
அன்னையாய்...தந்தையாய்...மக்களாய்...மற்றுமாய்...எல்லாமுமாய் அவன் மட்டுமே!
பாசுரத்தில் வீரயம் இதிலிருந்தே துவங்கி விடுகிறது...
ஆழ்வார் ஒரு வார்த்தைக்கு
அருகிலேயே அதற்கு எதிர் சொல்லை பயன்படுத்துகிறார்...
இவ்வாறாக...திங்கள் - ஞாயிறு (சந்திரன்-சூரியன்)
இருள்-சுடர்
புகழ்-பழி
உள்ளதும்-இல்லதும்(சித்து-அசித்து)
கழியாய்(இறப்பு)-பிறப்பாய்
அயர்ப்பு(மறதி)-தெளிவு
நெருப்பாய்-நீராய்
உருவாய்-அருவாய்
இவையனைத்துமாக இருப்பவன் அவன் ஒருவனே என்கிறார்...
இது என்ன "ஆச்சரியம்" என்ற ஒரு சொல்லுக்கு
இவை என்ன..நியாயங்கள்...விசித்திரங்கள்... விடமங்கள்..மயக்குக்கள்...
இயற்கைகள்...நுணுக்கங்கள்...என்ற பல சொல்லாடலைப்பயன் படுத்துகிறார்!
மற்றுமோர் வார்த்தை வியப்பாக இருந்தது..." சுண்டாயம்"
(சுயநலம்)
இப்படியெல்லாம் ஆழ்வார் சொல்லச் சொல்ல...மனதில் ஆழமாக பதிகிறது பார்க்கும் கேட்கும் உணரும் அனைத்தும் அவன் மட்டுமே (எம்பிரான்)
இப்போது பாருங்கள் கைபேசியிலும் அவன் இருப்பதாய் உணர்வீர்கள்!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Comments
Post a Comment