காப்பிடல்

(யசோதை பாவத்தில் இருக்கும் பெரியாழ்வார் 

அவன் செய்யும் சேட்டி தங்களை கண்டு பேரானந்தம் கொள்கிறாள்.கூடவே பயமும் ஏற்படுகிறது...கண் பட்டு விடுமோ இந்த கரிய மாலுக்கு... என்று "திருவந்திக்காப்பு" (திருஷ்டி கழித்தல்) காட்ட அழைக்கிறார்)

வாருங்கள் அனைவரும் யசோதை பாவத்திற்குசெல்லலாம்....

நொடிக்கு நொடி உனக்குச்சுற்றி போடலாம் அவ்வளவு அழகு நீ!

இந்த சந்திரன் வரும் அந்திப்பொழுதாவது உனக்கு காப்பிட வேண்டும்!

என்று நினைத்து க்கொண்டே அவன் செய்யும் சேட்டைகளை நினைவு கூறுகிறாள்...

சிறு பெண்கள் மண் வீடு கட்டி...சமைத்து...


விளையாடிக் கொண்டிருக்க... அங்கு சென்று அவற்றை கலைத்து விட்டு வந்து என்னிடம் நன்றாக திட்டு வாங்கினாய்! 

அப்படி யெல்லாம் இப்போது நான் திட்ட மாட்டேன்!பயம் வேண்டாம் ...

காப்பிடவாராய்!

சிறு பெண்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறாய்! எட்டி உதைக்கிறாய்! இதெல்லாம் நீயாகவா செய்கிறாய்? இல்லை இல்லை உன் சேர்க்கை சரியில்லை (செய்தனைத்தும் இவன் மட்டுமே) அதனால்தான்!ஊரில் உள்ள பிள்ளைகள் சேட்டைகள் செய்து விட்டு போக ...அது உன் மேல் விழப் போகிறது... அனைவரும் படுத்து உறங்கும் நேரமாயிற்று வாடா கண்ணா காப்பிட!

உனக்காக திருவெள்ளறையில் இந்திரன்,சிவன்,ருத்ரன் மந்திர மாலைகளோடு காத்திருக்கிறார்கள் உன்னைச் சேவிக்க!  நீ என்னவென்றால் நாற் சந்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாய்!

சிறிது காலம் முன் தான் செம்மயிர்பேய்(பூதனை)

வந்து உன்னை பயமுறுத்தினாள்!  

நடுங்க வைக்கும் தேவதைகள் வரும் நேரம் இது (கம்பக்கபாலிகள்)

இங்கு நிற்காது வாடா!என்று அவன் திறன் அனைத்தும் தெரிந்தும்

தாயின் பரிவு அவளை பாடாய்ப் படுத்துகிறது!

ஒருவாறு அவன் உருவைக் காட்டும் அந்தி காலத்தில் 

ஏற்றும் விளக்கால்... அதிலிருந்து வரும் ஒளியால் அவன் திருஷ்டி அனைத்தும் கழிகிறது!

அடியேனுக்கு ஒரே கவலை 

யாகி விட்டது...இவ்வுலகை ஆளும் எம்பிரானை பயமுறுத்த கம்பக்காபாலிகள் இருக்கிறதென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்!

பெரியாழ்வாரின் பாசுரம் கை கொடுக்கிறது இப்போதும்! என்னையும் என் உடமையையும் உனதாக்கி விட்டைன்! இனி என்ன கவலை எனக்கு (இனி என் திருக்குறிப்பே)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀


Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா