பித்தனாகிய அரங்கன் (திருமாலை)

ஒவ்வொரு ஆழ்வார்வாரும் அவருக்கென்று தனிபாணியில்... தனி பாவத்தில்... எம்பிரானை நினைந்து நினைந்து உருகு கின்றனர்...

தொண்டரடிப்பொடியாழ்வார் பார்க்கும் விதம் சற்று மாறுபட்டு இருக்கிறது!  அவர் அரங்கனுக்கும்...நமக்கும்... இடையில் நின்று கொள்கிறார்! 

அரங்கனை நோக்கி 


பூரித்து புலங்காங்கிதம் கொள்கிறார் !

அப்படியே நம்மைப் பார்க்கிறார்... அவருக்கு  நெஞ்சமெல்லாம் வலிக்கிறது!  நம்மைநல்வழிப்படுத்த "திருமாலை" எனும் பாவினால் ஆன சாட்டையை கையில் எடுக்கிறார்! வார்த்தைகளால் அடித்து அரங்கனைக் காட்டுகிறார்! அவன் பேருள்ளத்தை...பெருங்கருணையினை உணர்த்துகிறார் இவ்வாறாக!

அவன் நாமத்தைச் சொன்னால் மரணபயம் போய்விடப்போகிறது! நாம் செய்த பாவனைத்தும் பாவியாகிய"கத்திரபந்து" (எம்பிரான் நாமத்தை உரைத்து தன் பாவங்களைப் போக்கிக்கொண்டவன்)போல் இருந்த இடம் தெரியாமல் போய்விடப்போகிறது! அதைவிடுத்து பறவைக்கு இரையாகும் இந்த உடலுக்கே...புலன்களுக்கே...இரை தேடிக்கொண்டிருக்கும் மதியிலா மானிடங்காள்! சற்று கண் திறந்து அந்த எல்லையற்ற...பேரழகை...பச்சை நிறத்தால்(கண்களில் ஏற்பட்ட குளிர்ச்சியால் அந்த கரியவனை பச்சை நிறமாக உணர்கிறார்) ஆன மலை போன்றவனை...பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்...தாமரை போன்ற கண்களையும் பாருங்கள்!இதை விடுத்து பரமபதமே கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்! தூங்கி..பசித்து...

பிணித்து... குழந்தையாய்...இளமையாய்...பாதிக்காலம்  போய்விடும்...மீதி யனைத்தும் உறங்கிப்போய்விடும்! அதனால் இந்த சம்சார வாழ்க்கையும் வேண்டாம்! மற்ற தெய்வங்களை படைத்து சிறிய அருள் புரிகிறான்! இந்த உலகனைத்தும் உய்ய தன்னை...தன் இருப்பிடத்தை(திருவரங்கத்தை) காண்பித்து பேரருள் புரிகிறான்! ஆதலால் எனக்கு திருவரங்கமே வேண்டும் !வேறெதுவும் வேண்டாம்! 

அந்த மாயவன் எங்கும் நிறைந்திருக்க...வேறு யாரையும் நாம் பாடலாமா? கற்றவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்! மூடர்களே! இலங்கை அழித்த அந்த இராமனைத்தவிர வேறு யாரும் தெய்வமில்லை! கத்தியால் என் கழுத்தை அறுத்தாலும் நான் சாக மாட்டேன்! சத்தியம் செய்து கூறுகிறேன் "அரங்கனல்லால் தெய்வமில்லை" !நமக்கு அனைத்து செல்வங்களும் அருளும் ஶ்ரீ தேவி (பெரிய பிராட்டி)இருக்க நாம் வலியச்சென்று அவள் சகோதரியான மூதேவியை வேண்டி நிற்பது போல் உள்ளது நம் செயல்!(அரங்கனைத்தவிர்த்து வேறு இடம் செல்வது)

இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல அரங்கனின் பேருருவம்... அனைத்து பாவங்களையும் போக்கும் அவன் திருநாமம் ... நம் வருகைக்காய்...நம் நினைப்பிற்காய்...காத்திருக்கும் "பித்தன்"(அரங்கன் - தொண்டரடிப்பொடியாழ்வார் மட்டுமே அவனை பித்தன் என்று விளிக்கிறார்!ஆம்! பேரன்புடையவர்கள்..பித்தன் தானே)நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டான்!மனம் ஆவலிப்பு (கர்வம்) அடைகிறது!

"அரங்கனல்லால் தெய்வமில்லை" காத்திருப்போம்! அவர் அடுத்த சாட்டையடிக்காக! இனிமையாகத்தான் இருக்கிறது அவரின் அடியும்! பித்தனானேன் தொண்டரடிப்பொடி ஆழ்வாருக்கு!

நெஞ்சம் நிமிர்த்தி...

இரு கரம் கூப்பி...

ஆவலிப்பு தலை முதல் கால் வரை ஏற்பட...

உரக்கச் சொல்லுவேன்

அந்த அரங்கனின்...

ஆழ்வாரின்...

ஆச்சாரியனின்...

அடிமை! அடிமை!அடிமை!

தொண்டரடிப்பொடி யாழ்வார் திருவடிகளே சரணம் 

🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀




Comments

Popular posts from this blog

நீராட்டம்

பேரானந்தம்

எம்பெருமாட்டியின் கனா