Posts

Showing posts from April, 2025

பூச்சூட்டல்

Image
(யசோதை பாவத்திலிருக்கும் பெரியாழ்வார் அந்த கரிய குழல் உடையவனை  (எம்பிரானை) விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார்) ஆஹா...இந்த பிரபந்தத்தில் வரும் பத்து பாடல்களில் ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விதமான பூவைச்சூட எம்பிரானை அழைப்பதாக அமைந்துள்ளது... இப்பூக்களில் (படங்களை காணும் போது) சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் இறக்குமதியான பூக்கள் என்று நினைத்தது உண்டு !இத்தனை வருட காலம் அப்படித்தான் நினைத்தேன் இன்று வரை... ஆனால் அது நம் தேசத்தின் பூக்கள்.... அதற்கு அழகழகான தீந்தமிழ் பெயர்கள்... (புன்னை,கருமுகை, செங்கழுநீர், குருக்கத்தி, இருவாட்சி செண்பகம்... அப்பப்பா! தேன் வந்து பாயுது காதினிலே) இதோ ஆழ்வார் பாசுரத்தின் சிறு குறு சுருக்கம்! இந்த பத்து நாட்களும்...யசோதை தன் மைந்தனை பூச்சூட அழைக்கிறார்... ஒவ்வொரு பாடலிலும்...அவனை உவக்கிறாள்... நெகிழ்கிறாள்...வாஞ்சை யாகச் சாடுகிறாள்...பூச்சூட அழைக்கிறார்... அவள் உவந்து அழைத்த வரிகள்..."அருமருந்தாவது  அறியாய்"(சம்சாரிகளின் பாவத்தைப்போக்கும் அருமருந்து நீ) "கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்" "முகிற்கன்று போலே"(ம...

பேரானந்தம்

Image
நம்மாழ்வார் எம்பெருமானின் திருமேனி அழகை அனுபவிக்கிறார் (கோப மிகுதி)7.7 உருகி அழைத்தும் எம்பிரான் வராத காரணத்தால் ஆழ்வார் மிகுந்த கோபத்தையும்... வருத்தத்தையும்...அடைகிறார்.... அந்த கோபவெளிப்பாடாக இந்த பத்து பாடல்களும் அமைந்துள்ளன...இன்றுகோபத்திற்கு புதிய பார்வை கற்றுக் கொடுத்தார் ஆழ்வார்... கோபமாக இருந்தால் இன்னும் இன்னும் அன்பு செலுத்த... இன்னும் இன்னும் அவன்பால் ஈடுபட... அவனையே நினைத்துருக.... அச்சோ...அச்சோ... ஆழ்வாரே..கோபமாகவே இருங்கள்... அப்போதுதான் உங்கள் பார்வையில் எம்பிரானை பார்க்க பார்க்க....அவனில் ஈடுபட...பேரானந்தம் ஆக இருக்கிறது... ஆழ்வாரின் பார்வை இதோ அவனுடைய இரு "திருக்கண்களும்" பேதைப்பெண்களின் ஆத்மாவை அருந்துகிறது... அவனுடைய நீண்ட நெடிய "திருமூக்கு"... உயிருக்குள் சுடரொளியை ஏற்றுகிறது... அச்சோ! அடுத்து அவன் "திரு அ தரம்"... வாடாத கோவைப் பழம்... அழகெல்லாம் திரண்டு...எத்திசை நோக்கினாலும்...பவளக்கொழுந்தாக காட்சிப்படுகிறதே... அடுத்து அவனின் "திருப்பு ருவம்"... வளைந்த "கரும்பு வில்" ! மின்னலின் ஒளியாய் "திருப்பற்கள்"!  ...

திருஎழுகூற்றிருக்கை

Image
 (திருமங்கை ஆழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் (சாரங்கபாணி)பெருமாளிடத் தில் சரணாகதி செய்கிறார்) எதைச் சொல்வது ... எதை விடுவது... அவ்வளவு உள்ளடக்கம்.... இப்பிரபந்தம் ஒரே ஒரு பாசுரத்தை மட்டுமே கொண்டு உள்ளது... ஆனால் ஆயிரம் ஆயிரம் உள்ளீடுகள் கொண்டிருக்கிறது... அப்பப்பா... சற்று பொருங்கள்! மூச்சு  விட்டு க்கொள்கிறேன்... அவ்வளவையும் சொல்லாவிட்டாலும் சிறிதேனும் சொல்ல ஆசுவாசம் தேவைப்படுகிறது... இப்பிரபந்தம் "சித்திரக் கவி" வடிவில்ஆனது.."தேர்" அல்லது "ரதம்" வடிவத்தைப் சித்தரிக்கிறது... தமிழ்க் கவியிலேயே சித்திரம் வரைய முடியுமா... ஆயிரமாயிரம் சொற்களஞ்சியம் தமிழுக்கு உண்டு என்று அரிதியிட்டு கூறுகிறது ஆழ்வார் பாசுரம்... இதில் ஒன்று என்றசொல்  14 முறையும்... இரண்டு என்ற சொல் 13 முறையும்... மூன்று என்ற சொல் 11 முறையும் ... நான்கு என்ற சொல் 9 முறையும்... ஐந்து என்ற சொல் 7 முறையும்...ஆறு என்ற சொல் 5 முறையும்...ஏழு என்ற சொல் 2 முறையும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது... இந்த எண்களுக்கு எண்கள் பொருள் மட்டும் இல்லாமல் பல்வேறு பொருள்படும்படி அமைந்திருக்கிறது...           ...

பொங்கும் பரிவு

Image
 (சென்னியோங்கு பெரியாழ்வார் திருமொழி 5.4) "பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்  பட்டர் பிரான் பெற்றார்  பெரியாழ்வார் என்னும் பெயர்" யாருக்கேனும் இவ்வுலகின் மீது... உங்கள் மீது... சுற்றத்தின் மீது ஆற்றாமை வருகிறதென்றால்  பெரியாழ்வார் பாசுரம் படியுங்கள்... அனைத்தும் நொடிப்பொழுதில் மாறிவிடும்... நாம் இருந்த இடத்தில் தான் இருப்போம்... நம்மைச்சுற்றி எதுவும் மாறியிருக்காது... ஆனால் நாம் மாறியிருப்போம்...நம் மனம் மாறி இருக்கும்...நம்மை தாயுள்ளத்திற்கு மாற்றியிருக்கும் அவரின் பரிவு... அடியேன் மிகை கூற வில்லை...பரி வென்றால் பரிவு... அப்படியொரு பரிவு... பேரிடராக தோன்றியது அனைத்தும் தூசகத்தோன்றும்... பேரின்பம் எனத் தோன்றியதனைத்தும் அவ்வளவு இன்பமாக இருக்காது... மனம் இலகுவாக இருக்கும்... காற்றில் பறப்பதைப்போல... கண்கள் அசும்பாயிருக்கும்... (கண்கள் நீர் கொட்டி கொட்டி சேறாதல்) "ஆனந்த அழுகை" இந்த அழுகையில் துளிகூட வருத்தம்...வேதனை இருக்காது...அத்தனையும் ஆனந்தம்...மகிழ்வு... நிறைவு... இல்லை இல்லை அதை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை... உணர்ந்தால் மட்டுமே தெரியும்...அதன் சுகம்! ஒவ்வொரு பாச...

மனப்பயணம்

Image
 (நம்மாழ்வார் எம்பெருமானைக் காணுமாறு மனம்உருகி அழைக்கிறார்)7-6 பத்மநாபா ஓ! பத்மபாதா ஓ! தாமரைக் கண்ணா ஓ! தனியேன் தனிஆளா! ஓ! ஆஹா...சொல் இனிமையா? பொருள் இனிமையா? இல்லை இந்த "ஓகாரத்தின்" ஒலி தான் இனிமையா ?தெரியவில்லை... அதன்பிறகு அடியேன் அனைத்திலும் ஓ வை ஒட்டிப்பார்த்தேன்(பாத்திரம் ஓ! புத்தகம் ஒ! ) பொருந்தவில்லை... இனியவற்றுளெல்லாம் இனியவனுக்குத்தான் எதுவும் பொருந்தும் போலும்! இப்படி ரசித்தபடி இருக்க சந்தை அடுத்த பாடலுக்கு சென்று விட ஓடோடி வந்தேன் நினைவுகளில் இருந்து...வாய் தான் வந்ததே தவிர மனம் வரவில்லை... ஆழ்வாரின் அடுத்த இனிய சொல் வந்தால் தான் இது மறையும் போலும்...இதோ வந்து விட்டது... "என் ஆர்உயிர் நீயானால்" "என் பொல்லா கரு மாணிக்கமே"...சொக்கிப்போய்விட்டேன்... எம்பிரான் உறுதியாக வரமாட்டான்...பிறகு... வந்து விட்டால் இவ்வாறு எல்லாம் அழைப்பது நின்று விடுமே! அவன் எவ்வாறு ரசிப்பான்! விடவில்லை ஆழ்வார்...நம் அனைவரையும் மனப்பயணம் அழைத்துச்செல்கிறார்... நொடிப்பொழுதில் பரமபதம் தரிசித்து...  ஐம்புலன்கள்... நான் முகன்...ருத்ரன்... இவற்றுள் இருக்கும் எம்பிரானை தரிசித்து...

நீராட்டம்

Image
  (யசோதை பாவத்திலிருக்கும் பெரியாழ்வார்) தன் மைந்தனை நீராட்ட அழைப்பதில் இத்தனை ஆனந்தம் உணர முடியுமா என்ன! அவள் மட்டுமா ஆனந்தம் உணர்ந்தாள்...நாமும் அல்லவா அவன்பின் ஓடினோம்! வெண்ணெய் பூசி...புழுதியில் உழன்று...முடை நாற்றம் மணக்க...இந்த அழுக்கு கண்ணன் ஒன்பது நாட்களும் வளைய வந்து கொண்டிருந்தான்...ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு வரி அவன் மேன்மை உரைக்கிறாள்...ஒரு வரி அவன் செய்யும் சேட்டையில் சொக்கிப் போகிறாள்...நான்காவது வரி கொஞ்சி கெஞ்சி அழைக்கிறாள்...அடியேனும் ஆவலாய் காத்திருந்தேன்...இன்று இவன் கடாரம் நிறைந்த சுடு தண்ணீரில் நெல்லிக்கனி கலந்து நீராடி...சந்தனம் மஞ்சள் பூசி ...செங்கழுநீர் மாலை சூடி கமகமக்க வருவான்...  இப்படி அவனைஅநுபவிக்கக் காத்திருந்தால் எம்பிரான் என்னை ஏமாற்றி விட்டான் ஒன்பது கடந்து பத்தாம் பாட்டு வரும் நொடிப் பொழுதில் அனைத்தும் முடித்து விட்டு வந்து விட்டான்...பிறகு அழுக்கு கண்ணனை அநுபவித்தாயிற்று... புழுதியளந்த பொன்மேனிஎம்பெருமாட்டிக்கு(யசோதை) மட்டுமல்ல அடியோன்களுக்கும் அது தான் பிடிக்கும்... சற்று நிற்க...இவன் சுற்றி சுற்றி வருகிறான் கண் பட்டு விடப்படப்போகிறது இந்த கர...

எம்பெருமாட்டியின் கனா

Image
இன்றைய நாள் ஒரு மகத்தானது. ஏனெனில் இன்று தான்  தாயாரின் " வாரணம் ஆயிரம் " என்ற அமுதினைச் சுவைத்தேன்... ஆஹா...கனா என்றால் அது தான் கனா... தனது மணாளனை ...காளையாய்..‌யானையாய்...சிங்கமாய்...உருவகிக்கிறாள்... உடன் பிறந்தோர் உடன் இருக்க வேண்டும் என்கிறாள்(" என்னைமார் தாம் வந்திட்டு ")... பூக்களால் ஆன பந்தல் தவிர்த்து முத்துகளால் ஆன பந்தலை கனா காண்கிறாள்...இந்திரன் உள்ளிட்ட தேவர்களையெல்லாம் மணம் பேச அழைக்கிறாள்...உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவனை கரம் பிடிக்கிறாள்...பிறந்த வீட்டையும் ... புகுந்த வீட்டையும் ஒரு சேர தூக்கிப் பிடிக்கிறாள்... அம்மி மிதிப்பதன் அருமை புரிந்தது...கைப்பற்றி தீவலம் செய்தலின் மேன்மை புரிந்தது...பிரபந்தம் என்னும் பெருங்கடலுல் ஒரு துளி சுவைத்தே கிறங்கி கிறுகிறுத்து விட்டேன்...உணர்வில்லாமல் ஒரு திருமணம் செய்ததாய் உணர்கிறேன்...இனி கண்ணில் படும் யாரையும் விடப்போவதில்லை‌‌...எம்பெருமாட்டியின் கனாவை எடுத்துரைக்க வேண்டும்... திருமணத்தின்... அதன் சடங்குகளின் மேன்மையினை உணர வைக்க வேண்டும்...‌அடியேனை இவ்வகுப்பிற்கு வலியுறுத்திய நல்லுள்ளத்திற்கு என் நினைவிருக்...