திருமாலை பாகம்-3 (23-33)
ஆழ்வார் எப்போதும் கற்றுக் கொடுப்பார்நமக்கு. தீவிர பக்தியை வெளிப்படுத்துவார். இந்த 10 பாடல்களிலும் தன்னுடைய நைச்சிய பாவத்தை வெளிப்படுத்தி நம்முடைய மேம்போக்கான பக்தியை வெளிச்சமிட்டு காட்டுகிறார். இப்படி எல்லாம் ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்ள முடியுமா. ஆழ்வார் தன்னை அவ்வளவு தாழ்த்திக் கொள்கிறார். அடியேனுக்கு ஒரு பயம் எப்போதும் இருப்பதுண்டு நம்முடைய சிறுமை அனைத்தும் ஒப்புக் கொண்டால் நம்மை பிடித்தவர்கள் நம்மை விட்டு சென்று விடுவார்கள் என்று பலவற்றை சொல்லாமல் விட்டதுண்டு. ஆனால் ஆழ்வார் ஒன்று நமக்கு உரைக்கிறார். எம்பெருமானிடம் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறார். எம்பிரான் அவரை விட்டு நீங்க முற்படும்போது அவன் மேன்மையை உரைக்கிறார். அவன் செய்ய வேண்டிய கடமையை அவனுக்கே எடுத்துரைத்து அவனை அகல விடாமல் இறுகப்பற்றுகிறார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஏகாரத்தின் "ஒலி" வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஏழையேன் ஏழையேனே... நகருளானே... தோன்றினேனே... மூர்க்கனேனே... பொய்யனேனே.. இந்த ஏகாரத்தின் ஒலி வெளிப்பாடு மனதை ஏதேதோ செய்கிறது. நைச்சிய பாவத்தின் வெளிப்பாடாகவும்... கதறி அழைத்தலின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.....