Posts

திருமாலை பாகம்-3 (23-33)

Image
ஆழ்வார் எப்போதும் கற்றுக் கொடுப்பார்நமக்கு. தீவிர பக்தியை வெளிப்படுத்துவார். இந்த 10 பாடல்களிலும் தன்னுடைய நைச்சிய பாவத்தை வெளிப்படுத்தி நம்முடைய மேம்போக்கான பக்தியை வெளிச்சமிட்டு காட்டுகிறார். இப்படி எல்லாம் ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்ள முடியுமா. ஆழ்வார் தன்னை அவ்வளவு தாழ்த்திக் கொள்கிறார். அடியேனுக்கு ஒரு பயம் எப்போதும் இருப்பதுண்டு நம்முடைய சிறுமை அனைத்தும் ஒப்புக் கொண்டால் நம்மை பிடித்தவர்கள் நம்மை விட்டு சென்று விடுவார்கள் என்று பலவற்றை சொல்லாமல் விட்டதுண்டு. ஆனால் ஆழ்வார் ஒன்று நமக்கு உரைக்கிறார். எம்பெருமானிடம் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறார். எம்பிரான் அவரை விட்டு நீங்க முற்படும்போது  அவன் மேன்மையை உரைக்கிறார். அவன் செய்ய வேண்டிய கடமையை அவனுக்கே எடுத்துரைத்து அவனை அகல விடாமல் இறுகப்பற்றுகிறார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஏகாரத்தின் "ஒலி" வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஏழையேன் ஏழையேனே... நகருளானே... தோன்றினேனே... மூர்க்கனேனே... பொய்யனேனே.. இந்த ஏகாரத்தின் ஒலி வெளிப்பாடு மனதை ஏதேதோ செய்கிறது. நைச்சிய பாவத்தின் வெளிப்பாடாகவும்... கதறி அழைத்தலின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.....

திருமாலை (பாகம்-2) 12-22 அழகன் இருக்கும் ஊர் அரங்கம்

Image
அழகன் இருக்கும் ஊர் அரங்கம்  தொண்டரடிப்பொடியாழ்வாரின் "திருமாலை" ... ஆஹா... என்னவென்று சொல்வது...இப்பாசுர விளக்கம் கேட்கும் போதும்...சந்தையின் போதும்...எழுத முற்படும் போதும்...வண்டி (மனமாகிய) நகரவில்லை...நகர விருப்பமில்லை...அங்கே அங்கே நின்று விட்டது! என்ன செய்ய! பாசுரத்தின் ...ஆழ்வாரின்... அரங்கனின்... சுவை அப்படி! இதயம் வலித்த வலி (பேரின்ப வலி) சொல்லி மாளாது! வாருங்கள் ரசிக்கலாம் ஆழ்வாரின் கண்ணாடி அணிந்து அந்த அரங்கனை...அரங்கத்தை பார்க்கலாம்! தயாராக இருங்கள்...கண்கள் குளமாகி விடும்...நெஞ்சம் கனத்துப்போகும்! பேரின்பவெள்ளத்தால்! ஆழ்வாரின் சொல் வன்மை அப்படி! 12ஆம் பாடல் பாகம் 2 ல்( 12வது பாடல்) முதல் பாடலே அவன் நாம வலிமையை உணர்த்துகிறது! அந்த நாமங்கள் பலவுடைய அரங்கனின் நாமத்தை சொல்லாமல்...கேட்காமல்...அவனது ஊர் அரங்கம் என்று எண்ணாமல்...நல்ல மனிதர்கள் துக்கம் அடைந்து (கவளை) வீழ்ந்து விடுகின்றனர்! அதனை நினைத்தால் கவலையாக இருக்கிறது! அவன் நாமவலிமை பற்றி உங்களுக்கு தெரியுமா? (இப்படி துவங்குகிறார் ஆழ்வார்) நரகத்தில் எமன்...முக்கலனிடம் (பாவங்கள் மட்டுமே செய்தவன்) நீ ஒரே ஒரு முறை அரங்...

இராமாநுச நூற்றந்தாதி

Image
பெரியகோவில் நம்பி என்றழைக்கப்படும்  "திருவரங்கத்தமுதனார்" ஆல் இயற்றப்பட்டது இந்த "திவ்யப்பிரபந்தம்". இது அரங்கனையோ...இராமனையோ...கண்ணனையோ.. பற்றியதோ அல்ல... முழுவதும் தனது ஜகதாச்சார்யனான"இராமானுசரை" பற்றியது... சிறப்பு பெற்ற "களித்துறை அந்தாதி " யினால் ஆனது.. இந்த திவ்யப் பிரபந்தத்தில் வரும் பாடல்கள் எதுகை... மோனை... சந்தநயம்...உடையதாய்..செவிக்கும் இனிய தாய்...மனதிற்கும் இனியதாய் அமைந்திருக்கிறது! நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இராமாநுச நூற்றந்தாதி இயற்பாவைச்சேர்ந்தது. கடைசி ஆயிரமாக அமைந்துள்ளது! எங்கிருந்தோ பாவின் ஒலி ஒலிக்கிறது!  பூ மன்னு ; பா மன்னு; தாம் மன்ன ; நாம் மன்னி இப்படி ஒலிக்கிறது கேட்பதற்கு தேனிசையாய் இருக்கிறது! இது வேறெங்கும் அல்ல...இந்த திவ்யப் பிரபந்தத்தின் முதல் பாடல் தான் அது! வாருங்கள் ரசிக்கலாம்! ஆஹா முதலில் வருவது நம் தாயார் தான் ...🙏 பெரிய பிராட்டியை மார்பிலேஉடையவன்(பெரிய பெருமாள்)🙏 அந்த பெரிய பெருமாளின் கல்யாண குணங்களில் பெரிதும் ஈடுபட்ட நம்மாழ்வார்🙏....அந்த மாறனின் திருவடியை பணிந்து உய்ந்த "இராமானுசர்" 🙏... இந்த...

பித்தனாகிய அரங்கன் (திருமாலை)

Image
ஒவ்வொரு ஆழ்வார்வாரும் அவருக்கென்று தனிபாணியில்... தனி பாவத்தில்... எம்பிரானை நினைந்து நினைந்து உருகு கின்றனர்... தொண்டரடிப்பொடியாழ்வார் பார்க்கும் விதம் சற்று மாறுபட்டு இருக்கிறது!  அவர் அரங்கனுக்கும்...நமக்கும்... இடையில் நின்று கொள்கிறார்!  அரங்கனை நோக்கி  பூரித்து புலங்காங்கிதம் கொள்கிறார் ! அப்படியே நம்மைப் பார்க்கிறார்... அவருக்கு  நெஞ்சமெல்லாம் வலிக்கிறது!  நம்மைநல்வழிப்படுத்த "திருமாலை" எனும் பாவினால் ஆன சாட்டையை கையில் எடுக்கிறார்! வார்த்தைகளால் அடித்து அரங்கனைக் காட்டுகிறார்! அவன் பேருள்ளத்தை...பெருங்கருணையினை உணர்த்துகிறார் இவ்வாறாக! அவன் நாமத்தைச் சொன்னால் மரணபயம் போய்விடப்போகிறது! நாம் செய்த பாவனைத்தும் பாவியாகிய"கத்திரபந்து" (எம்பிரான் நாமத்தை உரைத்து தன் பாவங்களைப் போக்கிக்கொண்டவன்)போல் இருந்த இடம் தெரியாமல் போய்விடப்போகிறது! அதைவிடுத்து பறவைக்கு இரையாகும் இந்த உடலுக்கே...புலன்களுக்கே...இரை தேடிக்கொண்டிருக்கும் மதியிலா மானிடங்காள்! சற்று கண் திறந்து அந்த எல்லையற்ற...பேரழகை...பச்சை நிறத்தால்(கண்களில் ஏற்பட்ட குளிர்ச்சியால் அந்த கரியவனை பச்சை நிறமாக ...

திருமாலை(பாகம்-1) 1-11

Image
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் "திருமாலை அறியாதார்  திருமாலை அறியாதார்"! பூமாலை சூட்டி பாமாலை பாடப் பிறந்தவர்! இதிலுள்ள 44 பாக்களும் அந்த அரங்கனைப் பற்றியது. அரங்கனைப்பற்றியதென்றால் அவனை முன் வைத்து ஆழ்வார் நம்முடன் நின்று கொண்டு ...சாட்டையைச் சுழற்றுகிறார்...அடி சற்று பலம் தான் என்றாலும் உணர்வதென்னவோ இனிமை மட்டுமே ! "கண்ணன் அல்லால் தெய்வமில்லை" என்று ஆணித்தரமாக ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார்! நமக்கு அவனின் நாமத்தின் வலிமை... நம்முடைய தவறுகள்... பாவங்கள்... அதனால் வரும் விளைவுகள்...அதனைக் கடக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்து உரைக்கிறார்   1 ஆம் பாடல் ஆழ்வாரின் முதல் பாடலே நம்மை எழுப்பி நிமிர்ந்து அமரச் செய்கிறது! பாடல் மேலதாளத்துடன் மகிழ்ச்சி பெருக்குடன் துவங்கிறது! அவன்...அந்த மாயனின்...இந்த மூவூலகும் உண்டு உமிழ்ந்தவனின்...அந்த அரங்கனின் நாமம் சொல்வதால் ஏற்படும் "கர்வம்"(ஆவலிப்பு)என்னவெல்லாம் செய்தது தெரியுமா? மரணபயம் போய் விட்டது! காவல் இல்லாமல் (காவலில்) புலன் சென்ற போக்கில் சென்று...அதனால் ஏற்பட்ட தீயவற்றை யெல்லாம் நொடிப் ப...

பாரங்குச நாயகி படும்பாடு- தாயாரின் முறையீடு.கங்குலும் பகலும்

Image
திருவாய்மொழி 7.2 இப்பதிகம் அரங்கனைப் பற்றியது.அரங்கனைப் புகழும் பாசுரமல்ல; அவனிடம் அவனைப்பற்றியே முறையிடும் பாசுரம்...ஒருவரிடம் பன்முகத்தன்மை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட) கொண்ட வேறுபட்ட குணங்கள் உண்டு என்று சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதைப்பற்றி பதிவு செய்திருக்கிறார் நம் ஆழ்வார்...ஆம்! நம்மாழ்வார்! நம்மாழ்வார் எம்பெருமானின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக நாயகி(பராங்குச நாயகி)பாவம் கொள்கிறார்... அவனை விட்டு பிரிந்து அவள் படும் பாடு தாங்காமல் பராங்குச நாயகியின் தாயாராக பாவம் கொண்டு...அவள் படும் வேதனைக்கு வழி சொல்லுமாறு முறையிடுகிறாள்... இவ்வாறாக... உன்னை நினைத்து உருகி (அரங்கன்) இரவும் பகலும் தூக்கம் என்பதே அவள்(பாரங்குச நாயகி)கண்களுக்கு தெரியாமல் போனது...கண்களில் கண்ணீர் கொட்டுகிறது...துடைக்கும் படியாக அல்ல...இறைக்கும் படியாக...(அப்படியானால் நாமே முடிவுக்கு வந்து விடலாம் அவள் கண்களில் எவ்வளவு நீர் கொட்டி யிருக்கும் என்று)அழுவதை விட்டு விட்டு திடீரென கைகூப்புகிறாள்...கேட்டால் அங்கே சங்கு சக்கரங்கள் தெரிகிறது என்கிறாள்....

கண் கோடி வேண்டும்

Image
 திருவாய்மொழி 7.4 (ஒவ்வொரு அவதாரத்திலும் பெற்ற வெற்றிகளை ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார் எம்பெருமான்) அவன்(எம்பெருமான்) எடுத்த அவதாரம் அனைத்திலும் நம்மாழ்வார்  உடன் இருப்பதாக...(ஒன்றி நின்ற சடகோபன்)உடன் பயணிப்பதாக... ஆழ்வார் உணர்கிறார்! ஆழ்வார் அந்த "பேரானந்தத்தை"நமக்கு பாசுரம் வழியாக கடத்துகிறார்...அது இன்னும் இன்னும் ஆனந்தமாக இருக்கிறது! இந்த பதிகமனைத்தும் செவிக்குசுவை மிகுந்து இருக்கிறது! அத்தனையும் சந்த நயத்துடன்...ஒருவித சங்கீதத்துடன்... கேட்க கேட்க இனிமை! இனிமை மட்டுமா இதோ ஆழ்வார் ஒவ்வொரு அவதாரத்தையும் இப்போது... இங்கே...இச்சனம்...நடந்தது போல ... பாடியிருக்கிறார்...கண்களை மூடிக் கொள்ளுங்கள்! ரசிக்கத் தயாராகுங்கள்! முதல் பாட்டிலேயே "திரு விக்கிரமன்" வரப்போகிறான்! என்ன இருகரம் கூபீபிவிட்டீர்களா!  "வாமன மூர்த்தியிலிருந்து" "திருவிக்கிரமனாக" மாறுகிறார் அற்புத காட்சி  இதோ சக்கரத்தாழ்வான்... சங்கம்...கோதண்டம்(வில்)..கதை...வாள்... இவையனைத்தும் புடைசூழ அனைத்து திசைகளில் இருந்தும் "வாழ்த்தொலி" முழங்க... இவ்வுலகின் நீர்க்குமிழியை உடைத்து எழுக...