பாரங்குச நாயகி படும்பாடு- தாயாரின் முறையீடு.கங்குலும் பகலும்

திருவாய்மொழி 7.2 இப்பதிகம் அரங்கனைப் பற்றியது.அரங்கனைப் புகழும் பாசுரமல்ல; அவனிடம் அவனைப்பற்றியே முறையிடும் பாசுரம்...ஒருவரிடம் பன்முகத்தன்மை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட) கொண்ட வேறுபட்ட குணங்கள் உண்டு என்று சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதைப்பற்றி பதிவு செய்திருக்கிறார் நம் ஆழ்வார்...ஆம்! நம்மாழ்வார்! நம்மாழ்வார் எம்பெருமானின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக நாயகி(பராங்குச நாயகி)பாவம் கொள்கிறார்... அவனை விட்டு பிரிந்து அவள் படும் பாடு தாங்காமல் பராங்குச நாயகியின் தாயாராக பாவம் கொண்டு...அவள் படும் வேதனைக்கு வழி சொல்லுமாறு முறையிடுகிறாள்... இவ்வாறாக... உன்னை நினைத்து உருகி (அரங்கன்) இரவும் பகலும் தூக்கம் என்பதே அவள்(பாரங்குச நாயகி)கண்களுக்கு தெரியாமல் போனது...கண்களில் கண்ணீர் கொட்டுகிறது...துடைக்கும் படியாக அல்ல...இறைக்கும் படியாக...(அப்படியானால் நாமே முடிவுக்கு வந்து விடலாம் அவள் கண்களில் எவ்வளவு நீர் கொட்டி யிருக்கும் என்று)அழுவதை விட்டு விட்டு திடீரென கைகூப்புகிறாள்...கேட்டால் அங்கே சங்கு சக்கரங்கள் தெரிகிறது என்கிறாள்....